பதிவு செய்த நாள்
06
ஜூலை
2016
10:07
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் கோபுரத்தின், மேல்பகுதியில் உள்ள ஒரு சிற்பம், இடி தாக்கி விழுந்தது. திரு வள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த, ஆந்திர மாநிலத்தில், ஒரு கி.மீ., துாரத்தில் உள்ளது, சுருட்டப்பள்ளி கிராமம். இங்கு, சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 13ம் நுாற்றாண்டு அரிகரபுக்கர் என்ற அரசரால் புனரமைக்கப்பட்டது. சிவபெருமான் உலகை காக்க வேண்டி, ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில், அன்னை பார்வதி மடியில் படுத்து உறங்குவது போன்று, பக்தர்களுக்கு அருள் பா லிக்கிறார். மற்ற சிவாலயங்களில், சிவபெருமான் லிங்க ரூபத்தில் காட்சி அளிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, தமிழக – ஆந்திர எல்லையில், ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், இடியுடன் கூடிய மழை பெய்தது. இரவு 9:00 மணிக்கு, பலத்த இடி இடித்தது. இதில், பள்ளி கொண்டீஸ்வரர் கோவிலில், நுழைவாயிலில் உள்ள மூன்றடுக்கு கோபுரத்தின் மேல் பகுதியில், வலது பக்கத்தில் உள்ள அம்மன் சி லைக்கு மேல் இருந்த, சிங்க முகம் சேதமடைந்து விழுந்தது. காலையில், இதை பார்த்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்திடம் கூறினர். கோவில் நிர்வாகத்தினர் வந்து பார்த்த போது, கோபுரத்தின் மேல்பகுதியில் சிறிதளவு சேதமடைந்தது தெரிய வந்தது.