தேனி: குள்ளப்புரம், வரதராஜ் நகர் பத்ரகாளியம்மன், விநாயகர் கோயில்களில் கலசாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் துவங்கின. நேற்று காலை 8.30 மணிக்கு பிரம்ம கலச பூஜையும், காலை 10.30 மணிக்கு பிரம்ம கலசாபிஷேகமும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.