கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் கண்ணபிரான் கோவில் கும்பாபிஷேகம் 10ம் தேதி நடக்கிறது. கடலுார் திருப்பாதிரிப்புலியூர் திரு வரசன்பிள்ளைத் தோட்டத்தில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத கண்ணபிரான் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 8ம் தேதி காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு அனுக்ஞை, அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடக்கிறது. 9ம் தேதி காலை 8:00 மணிக்கு ரக்ஷா பந்தனம், முதல் கால யாக பூஜை, பகல் 12:00 மணிக்கு சாற்றுமுறை, மாலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 6:00 மணிக்கு மங்களாசாசன உபன்யாசம் நடக்கிறது. 10ம் தேதி காலை 7:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, யாத்ராதானம், 8:30 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் கும்பாபி ஷேகம் நடக்கிறது.