புதுச்சத்திரம்: வில்லியநல்லுார் முத்துமாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த மே மாதம் 19 ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு தினமும் மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்றுடன் 48 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. விழாவையெ õட்டி காலை 10.00 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து 11.30 மணிக்கு அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி மண்டலாபிஷேக நிறைவு விழாவும், 11.45 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது.