ஆஷாட ஏகாதசி விழா: கருவறையில் சுவாமி தொட்டு தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2016 12:07
கரூர்: ஆஷாட ஏகாதசி விழாவை முன்னிட்டு, கரூர் பண்டரிநாதன் கோவிலில் மூலவரின் பாதத்தை தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சி வரும், 15ம் தேதி நடக்கிறது. ஆஷாட ஏகாதசி விழாவை முன்னிட்டு, கரூர் ஸ்ரீ பண்டரிநாதன் கோவிலில் வரும், 14 ம் தேதி மாலை, 6 மணிக்கு துக்காரம் கொடி புறப்பாடு நடக்கிறது. 15ம் தேதி ஆஷாட ஏகாதசி என்னும் மகோற்சவம் நடக்கிறது. மகோற்சவத்தில் பாதுகை சேவை நிகழ்ச்சியில், பண்டரிநாதன் மூலவரின் பாதத்தை தொட்டு வணங்க அனுமதிக்கப்படுகிறது. 16ம் தேதி அதிகாலை, 6 மணிக்கு அமராவதி ஆற்றில் பண்டரிநாதன் சுவாமிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.