பதிவு செய்த நாள்
08
ஜூலை
2016
12:07
கொளந்தாகவுண்டனூர்: கரூர் அருகேயுள்ள கொளந்தாகவுண்டனூர், செல்வ விநாயகர், பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 10ம் தேதி காலை, 8 மணிக்கு நடக்கிறது. இதை முன்னிட்டு கொடுமுடி ஆற்றில் இருந்து, ஊர் பொதுமக்கள் சார்பில், தீர்த்தம் ஊர்வலமாக இன்று காலை, 9 மணிக்கு கொண்டு வரப்படுகிறது. நாளை (9ம் தேதி) காலை, 7.30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மாலை அனுக்ஞை, கணபதி பூஜை மற்றும் திரவியப்பொடிகள் கொண்டு பல்வேறு பூஜைகள் நடக்கிறது. வரும், 10ம் தேதி இரண்டாம் கால பூஜைகளுடன் காலை, 8.35 மணிக்கு விமான கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.