பதிவு செய்த நாள்
09
ஜூலை
2016
02:07
உடுமலை:கொங்கல்நகரம் கிருஷ்ணபகவான் கோவில், கும்பாபிேஷகம் நாளை நடக்கிறது. குடிமங்கலம் ஒன்றியம், கொங்கல்நகரத்தில், கிருஷ்ணபகவான், பாமா, ருக்மணி சமேத நந்தகோபாலசாமி, வேணுகோபாலசாமி கோவில் உள்ளது. பழமையான கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷக விழா, நேற்று துவங்கியது. காலை விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், லிங்கம்மாவூர் கிராமத்தினர் தேவராட்டம், ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இன்று, யாகசாலை பூஜை உட்பட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நாளை, (10ம் தேதி) பூர்ணாகுதி உட்பட சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, காலை, 8:00 மணிக்கு, கும்பாபிேஷகம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.