பதிவு செய்த நாள்
09
ஜூலை
2016
02:07
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், சிவகாமசுந்திரி சமேத ஆனந்த நடராஜருக்கு, ஆனி மஞ்சன விழா நேற்று தொடங்கியது. காலை, 7 மணிக்கு மாணிக்கவாசகர் குருபூஜை மற்றும் திருவாசகம் முற்றோதலும், 8 மணிக்கு திருநெறிய தெய்வத் தழில் வழிபாட்டு சபையினரின் திருமுறை, திருப்புகழ் இன்னிசை நடந்தது. மாலை, 4 மணிக்கு மாணிக்கவாசகர் திருவீதி உலா நடந்தது. இன்று மாலை, 4 மணிக்கு நால்வர் திருவீதி உலா, மா, பலா, வாழை உள்ளிட்ட, 21 அபிஷேக பொருட்களுடன் வரிசை அழைப்பு நடக்கிறது. நாளை அதிகாலை, 4 மணிக்கு, சிவகாமசுந்திரி சமேத ஆனந்த நடராஜருக்கு அபிஷேகம், 10 மணிக்கு சுவாமி ஆனி திருமஞ்சன தரிசனத்தில், பக்தர்களுக்கு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். இரவு சுவாமியின் நடன திருவீதி உலா மற்றும் கோபுர தரிசனம் நடக்கிறது.