வாடிப்பட்டி, :வாடிப்பட்டி பொன்பெருமாள் மலையிலுள்ள ஜய வீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயிலில் ஜூலை 10ம் தேதி காலை 9.00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 7.00 மணிக்கு கோ பூஜை, சிறப்பு தீபாராதனைகள், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மகா அர்ச்சனை செய்யப்படுகிறது. காலை 10.00 மணிக்கு சாத்துமுறை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.