புதுச்சேரி: லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவிலுக்கு, புதிதாக செய்யப்பட்ட பகாசூரன், அன்னவாகன கரிக்கோல ஊர்வலம் நடந்தது. லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் ரூ. 10 லட்சம் செலவில் அன்னவாகனம் மற்றும் பகாசூரன் வாகனம் புதிதாக செய்யப்பட்டது. புதிய வாகனத்தின் கரிக்கோல ஊர்வலம் நேற்று நடந்தது. முன்னாக நேற்று காலை 7:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து கரிகோல ஊர்வலம் துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் இறுதியில் கோயிலை அடைந்தது. நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, மரத்தால் செய்யப்பட்ட பகாசூரன் நன்கொடையாக வழங்கிய விநாயகம், பிரகாஷ், மரத்தால் செய்த அன்ன வாகனம் நன்கொடையாக வழங்கிய புருஷோத்தமன், கலிவரதன், ராமதாஸ், மணி, உமாபதி உட்பட கோவில் நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.