ராஜபாளையம்: ராஜபாளையம் அம்பலபுளிபஜாரில் உள்ள குருசாமிசமாது கோயில் கும்பாபிஷேகவிழா, மகா குருபூஜை நாளான ஜூலை 1ல் துவங்கியது. பன்னிரெண்டு திருமுறை பாராயணம், பஜனை, சொற்பொழிவு, நாதஸ்வர நிகழ்ச்சி நடந்தன. யாகசாலை பூஜை ஜூலை 9ல் துவங்கியது. நேற்று காலை 9.30 மணிக்கு கலசத்திற்கு புனிதநீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. இதை வெங்கடசுப்பிரமணியன் பட்டர் தலைமையில் குழுவினர் நடத்தினர். பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. ராஜபாளையம் நகரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். சங்கரேஸ்வரன் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார், ஊர்காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.