திருவாடானை: திருவாடானை அருகே தினையத்துார் மாரியம்மன் கோயில், தொண்டி அருகே பி.வி.பட்டினம் பத்திரகாளியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் ஆரம்பித்து தொடர்ந்து 3 நாட்கள் நடந்தது. நேற்று காலை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத மூலஸ்தான கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கபட்டது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.