புனித மிக்கேல் ஆலயத்தில் 20ம் தேதி திருத்தல பெருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2011 10:09
தென்காசி : தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் வரும் 20ம் தேதி திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதுபற்றி தென்காசி பங்கு தந்தை மற்றும் வட்டார அதிபர் வியாகப்பராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: ""தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் "சர்வேசுவரன் கோயில் என அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் இங்கு அனைத்து மதத்தினரும் வந்து வழிபாடு நடத்துகின்றனர். இத்திருத்தல பெருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருத்தல பெருவிழா வரும் 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று மாலை 5.30 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. அகரக்கட்டு பங்கு தந்தை அந்துஜோசப் தலைமை வகிக்கிறார். மதுரை புனித பேதுரு குருமடம் பேராசிரியர் மரிய அந்தோணி மறையுரை வழங்குகிறார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மறையுரை நடக்கிறது. 24ம் தேதி திருப்பலிக்கு பின் ஆர்.சி.துவக்கப் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. 25ம் தேதி காலையில் விவிலிய போட்டிகள் நடத்தப்படுகிறது. மாலை திருப்பலிக்கு பின் புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆர்.சி. உயர்நிலைப் பள்ளிகளின் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 26ம் தேதி ஒப்புரவு அருட்சாதனம் நடக்கிறது. 27ம் தேதி நற்கருணை பவனியும், 28ம் தேதி இரவு அதிதூதரின் தேர் பவனியும், இசை பாடல் கச்சேரியும் நடக்கிறது. 28ம் தேதி அதிதூதரின் திருவிழா நடக்கிறது. காலை 7 மணிக்கு பாளை.,மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. புனலூர் மறைமாவட்ட ஆயர் செல்விஸ்டர் பொன்னுமுத்தன் மலையாள திருப்பலி நடத்துகிறார். 30ம் தேதி கொடியிறக்கம் நடக்கிறது. திருவிழாவில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார் பங்கு தந்தை வியாகப்பராஜ்.