மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ தெப்ப உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2011 10:09
புதுச்சேரி:மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்பல் உற்சவம் நேற்று நடந்தது. மணக்குள விநாயகர் கோவில் 55ம் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சிம்மம், சூரியபிரபை, நாகம், வெள்ளி மூஷிகம், அன்னம், குதிரை வாகனங்களில் வீதியுலா நடந்தது. நேற்றுமுன்தினம் காலை 11 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்பல் உற்சவமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.