இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு யாக பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2016 11:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், இஞ்சிமேடு கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பெருந்தேவி நாயகி சமேத ஸ்ரீவரதராஜபெருமாள் கோவிலில், நேற்று காலை சுவாதி நட்சத்திர சிறப்பு யாக பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள யாகசாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள் முன்னிலையில், பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில், 20க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, பூஜை செய்தனர். தொடர்ந்து யாக சாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரை எடுத்துச் சென்று, மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.