தேவகோட்டை: டி.சிறுவனுாரில் கட்டாயதமுடைய அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் உள்ள பூர்ண புஷ்கலை சமேத கட்டாயுதமுடைய அய்யனார், தட்டாரகாளியம்மன் , மற்றும் பரிவார சுவாமிகளுக்கு, நான்கு கால யாகபூஜைகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது. கொல்லங்குடி காரியப்ப குருக்கள் சிறப்பு வேள்வி நடத்தி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.