விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த கயத்துாரில் நான்கு கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த கயத்துார் கிராமத்தில் வலம்புரி வினாயகர், விஷ்ணு துர்கை, சங்கர நாராயண பெருமாள், பிடாரியம்மன் ஆகிய கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை செய்து வைத்தார். விக்கிரவாண்டி சந்திரசேகர குருக்கள் தலைமையில், நடராஜ குருக்கள், மணிகண்டன் குருக்கள் ஆகியோர் யாகசாலை வேள்விகளை நடத்தினர். ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவேல் உள்ளிட்ட பிரமுகர்கள், விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.