மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவில் இருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால் அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும் அதேபோல் வடக்கு தெற்கு கோபுரங்களிடையே கோடிட்டுப் பார்த்தால் அது சுந்தரேஸ்வரர் சன்னிதியை இரண்டாகப் பிரித்துச் செல்லும், இந்த அமைப்பு அக்காலச் சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.