பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழா வரிசையில் சிறப்பு பெற்றதில் பெரியகுளம் கவுமாரியம்மன் திருவிழாவும் ஒன்றாகும். இக்கோயில் அறநிலையத்துறைக்கு உட்பட்டது. கவுமாரியம்மனை வணங்கினால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். கோயில் ஆனித்திருவிழா ஜூலை 11ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருக்கண் அபிஷேகத்தில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. பத்து நாட்கள் திருவிழாவில் அம்மன் குதிரை, யானை, பூபல்லாக்கு, அன்னபட்ஷி, ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். ஏராளமான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்கின்றனர். முக்கிய நிகழ்வாக ஜூலை 19ல் மாவிளக்கு எடுத்தலும், 20ல் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து அம்மனை வழிபட உள்ளனர். கோயிலை சுற்றி போக்குவரத்து இடையூறு அதிகம் உள்ளது. இதில் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.