Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் வரும் 28ம் தேதி ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி கோவில் லட்டு விலை உயராது : தேவஸ்தான சேர்மன் உறுதி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 செப்
2011
10:09

நகரி: திருப்பதி வெங்டேச பெருமாள் கோவில் லட்டு பிரசாதம் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை. சேர்மன் பதவியில் நான் இருக்கும் வரை லட்டு விலை உயர்த்தப்படாது, என, தேவஸ்தான போர்டின் சேர்மன் பாபிராஜூ தெரிவித்தார். திருமலை கோவிலில் லட்டு தயாரிக்கும் இடம், லட்டு விற்பனை கவுன்டர்கள், நித்திய அன்னா பிரசாதம், தெப்பக்குளம் மற்றும் முடிகாணிக்கை செலுத்தும் வளாகம் ஆகியவற்றை பாபிராஜூ அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அவர் கூறியதாவது: திருமலை தெப்பக் குளத்தை சுற்றிலும், நான்கு கோடி ரூபாய் செலவில், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு பின், பரமபவித்திரா பிரசாதமாக பெற்று செல்லும் லட்டு தரத்தை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படும். கூடுதலாக வாங்கும் லட்டு டோக்கன்களுக்கு, இரண்டு மணி நேரம் விதிமுறை என்பதை, மூன்று மணி நேரமாக நீட்டிக்கப்படும். திருமலை கோவில் பொக்கிஷத்தில், இந்தாண்டு ஜனவரி முதல், ஜூலை வரை வரவு வைக்கப்பட்டுள்ள, 505 கிலோ தங்க ஆபரணங்கள், ஆறு பிரிவுகளாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மும்பை மின்ட்டு பகுதியில் உள்ள தங்கம் உருக்கு ஆலையில், பிஸ்கட்களாக உருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இங்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான, 22 கேரட் நாணயத்துடன் உள்ள, 57 கிலோ தங்கத்தையும் வங்கிகளில் டெபாசிட் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar