மீனாட்சி கல்யாணம், சீதா கல்யாணம் என கல்யாணத்திற்கு பெண் தெய்வத்தையே குறிப்பிடுவது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2016 03:07
ஒரு ஆண் மகனுக்கு தான, தர்மம், யாகம், முன்னோர் வழிபாடு செய்ய திருமணமான பின்னரே முழு அதிகாரத்தை சாஸ்திரம் அளித்துள்ளது. மற்றொன்று இல்லற வாழ்வின் பொறுப்புணர்ந்து, குடும்பத்திற்காக உழைக்கும் கடமை அவனுக்கு தரப்படுகிறது. இந்த இரண்டையும், ஒரு பெண்ணின் கரத்தை பற்றிய பிறகு தான் ஆண் அடைகிறான். எனவே குடும்ப வாழ்வில் பெண்களே முக்கியத்துவம் பெறுகின்றனர். இதனால் தான் திருமணங்களை பெண் தெய்வங்களின் பெயரால் குறிப்பிடுகின்றனர்.