பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. உற்சவ மூர்த்தியான பூமி நீளா பெருந்தேவி சமேத கரிவரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்கள், நாலாயிர திவ்யப் பிரபந்தம் மற்றும் விஷ்ணு சகஸ்கர நாமத்தை சேவித்தனர்.