பதிவு செய்த நாள்
20
ஜூலை
2016
02:07
கரூர்: கரூர், மாவடி ராமசாமி கோவிலில் அரசுவேம்பு திருமணம், வரும், 24ம் தேதி நடக்கிறது. கரூர், மாரியம்மன் வகையறா கோவில்களை சேர்ந்த மாவடி ராமசாமி கோவில் வளாகத்தில் அரசு, வேம்பு மரம் ஒன்றாக உள்ளது. இந்த அரசு, வேம்பு மரத்திற்கு, வரும், 24ம் தேதி காலை, 7.45 மணி முதல், 9 மணிக்குள் திருமண விழா நடக்கிறது. இந்த திருமண தரிசன நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், பகைமை நீங்கி ஒற்றுமை ஏற்படும்; குழந்தை பேறு கிடைக்கும்; முன்னோர் சாபம் நீங்கும்; மாங்கல்ய தோஷம் நீங்கி, திருமண தடை அகலும் என்று கூறப்படுகிறது. எனவே, திருமண விழாவில் பங்கேற்க, கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.