சிதம்பரம்: சிதம்பரம், கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனையொட்டி நாளை காலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சன்னதி எதிரில் உள்ள உற்சவ கொடிமரத்தில் கொடியேற்று தீபாராதன நடக்கிறது. அதனைத் தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா மற்றும் காத்தவராயன் கதை சொற்பொழிவு நடக்கிறது. உற்சவத்தில் வரும் 26ம் தேதி தெருவடைச்சான். 31ம் தேதி தேரோட்டம், ஆகஸ்ட் 1ம் தேதி செடல் மற்றம் தீமிதி திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வீராசாமி, அற ங்காவலர் கலியமூர்த்தி செய்கின்றனர்.