கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த கோ.ஆதனுார் காலனி முத்துமாரியம்மன் கோவிலில், வரும் 25ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது. இதை முன்னிட்டு, கடந்த 18ம் தேதி காலை 9:00 மணியளவில் காப்பு கட்டி, கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தினமும், காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து அரு ள்பாலிக்கிறார். தொடர்ந்து அம்மன் பிறப்பு வளர்ப்பு நாடகம் நடக்கிறது. வரும் 25ம் தேதி காலை 9:00 மணியளவில் செடல் உற்சவம், இரவு 8:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, 26ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 27ம் தேதி கும்ப படையலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.