Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி சுப்பரமணியர் கோவிலில் ஆடி ... குருவித்துறை கோயிலில் ஆக., 2ல் குரு பெயர்ச்சி! குருவித்துறை கோயிலில் ஆக., 2ல் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
45 ஆண்டுகளுக்கு பின் செல்லியம்மனுக்கு படையல்!
எழுத்தின் அளவு:
45 ஆண்டுகளுக்கு பின் செல்லியம்மனுக்கு படையல்!

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2016
11:07

ஊத்துக்கோட்டை: செல்லியம்மனுக்கு, 45 ஆண்டுகளுக்குப்பின், இனிப்புகள், பழங்கள் படைத்து, பக்தர்கள் வழிபட்டனர். ஊத்துக்கோட்டை, ஏரிக்கரையோரம் உள்ளது செல்லியம்மன் கோவில். இக்கோவிலில், செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ தினங்களில், அதிகளவு பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, அம்மனை வழிபடுவர். இங்கு பக்தர்கள் பங்களிப்புடன், 45 ஆண்டுகளுக்கு பின், இரண்டு நாள் திருவிழா நடந்தது. கடந்த, 20ம் தேதி, புதன் கிழமை, காலை 6:00 மணிக்கு, செல்லியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பொங்கல் வைக்கப்பட்டது. மதியம், 1:30 மணிக்கு, கரகம் புறப்பாடு நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் செல்லியம்மன், 16 கைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரெட்டித் தெரு, செட்டித் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, நேற்று காலை, அம்மன் ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் அருகே உள்ள, மண்ணடியைச் சேர்ந்தது. அப்போது பக்தர்கள் இனிப்பு, பழ வகைகள் மற்றும் ஆடுகளை பலியிட்டு, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். நேற்று மாலை, எட்டு கைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்து, மண்ணடியில் இருந்து ரெட்டித் தெரு வழியாக அம்பேத்கர் நகரை அடைந்தது. அங்கு அம்மனுக்கு படையல் இட்டு, ஆடு, கோழிகளை பலியிட்டு, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு அங்கிருந்து புறப்பட்டு அம்மன் கோவிலை அடைந்தது. இரவு இன்னிசை கச்சேரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை மங்கம்மாள் கேணி பூக்குழி திடலில் நுாறாண்டுகள் கடந்த பழமை வாய்ந்த சர்வ சக்தி விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar