குருவித்துறை: சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோயிலில் ஆக., 2 ல் குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. அனைத்து ராசியினருக்கும் ஜூலை 31 முதல் லச்சார்ச்சனை துவங்குகிறது. இக்கோயிலில் சுயம்புவாக குரு பகவான் தவக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஆக., 2 ல் காலை 9.27 மணிக்கு சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். இதை முன்னிட்டு அனைத்து ராசியினருக்கும் பரிகார பூஜையாக லச்சார்ச்சனை நடக்கிறது. நிர்வாக அதிகாரி விஸ்வநாத் கூறியதாவது: லட்சார்ச்சனை டிக்கெட் 300 ரூபாய் செலுத்துவோருக்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் உருவம் பொறித்த இரண்டு கிராம் வெள்ளி டாலருடன் பிரசாதம் வழங்கப்படும். 100 ரூபாய் செலுத்துபவர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், தென்கரை அகிலாண்டேஸ்வரியம்மன், திருமூலநாதர் சுவாமி கோயில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில்களில் லச்சார்ச்சனை டிக்கெட் கிடைக்கும். விபரங்களுக்கு 97903 55234 ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.