செஞ்சி சுப்பரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2016 11:07
செஞ்சி: செஞ்சி பி. ஏரிக்கரை சுப்பரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. செஞ்சி பி. ஏரிக்கரை மீதுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் வரும் 28ம் தேதி 45வது ஆண்டு ஆடி கிருத்திகை விழா நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்கு ஆடி கிருத்திகை திருவிழாவுக்கான கொடியேற்றம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சு ப்பிமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். 8 மணிக்கு நவ கலச பிரதிஷ்டை செய்து, விசேஷ ஹோமம், புர்ணாஹூதியும் நடந்தது. கொடிமரத்திற்கு விசேஷ அபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம், சிறப்பு பூஜைகளை செய்து கொடியேற்றினர். தொடர்ந்து சாமிக்கும், பக்தர்களுக்கும் காப்பு அணிவித்தனர்.இதில் விழா குழுவினர் அரங்க ஏழுமலை, சிவக்குமார், மதியழகன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.