பழநி: பழநி மலைக்கோயில் உண்டியலில் 24 நாட்களில் ரூ. 1.71 கோடி வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு நேற்று எண்ணப்பட்டது. இதில் தங்கம் 902 கிராம், வெள்ளி 11,200 கிராம், வெளிநாட்டு கரன்சி-1182, ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 71 லட்சத்து 37 ஆயிரத்து 625 கிடைத்துள்ளது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா, உதவி ஆணையர் சிவலிங்கம், பங்கேற்றனர்.