பதிவு செய்த நாள்
22
ஜூலை
2016
12:07
அவிநாசி : ""அடியார்களுக்கு செய் யும் தொண்டு, ஆண்டவனை போய் சேரும், என, பக்தி சொற்பொழிவில், கருத்து தெரிவிக்கப்பட்டது. அவிநாசியில், ஆன்மிக நண்பர்கள் குழு சார்பில், பக்தி தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது. ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி பேசியதாவது: இறைவனை அடைய பல வகையான பக்தி உள்ளது. எதையும் கேட்காமல், இறைவனை வழிபடுவது தேவ பக்தி. கேட்டுக்கொண்டே இருப்பது மனித பக்தி. கடவுள், மனிதர்களின் வினைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு பிறவி தந்து, சுக துன்பங்களை அனுபவிக்க செய்கிறார். பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, அவரவர் வாழ்க்கை அமைகிறது. தர்மம் செய்பவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. இறைவனை நம்பி, சரணாகதி அடைபவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். பக்தியில் சிறந்து விளங்கிய அவன், 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்வான் என்ற நிலையில், அமிர்தகாடையீஸ்வரரை சரணடைந்ததால், என்றும் 16 வயதுள்ளவனாக, நித்ய சிரஞ்சீவியாக வாழும் வரம் பெற்றான். எதன் மீதும் பற்று இல்லாமல் வாழ்வதே உண்மையான துறவு; இறைவனை தவிர வேறு சிந்தனையே இருக்க கூடாது. அடியார்களுக்கு செய்யும் தொண்டு, ஆண்டவனை போய் சேரும். இறைவனே மகனாக பிறந்து, வாழ்க்கையின் நிலையாமையை, பட்டிணத்தாருக்கு கற்பித்தார். "என்னுடையது எதுவுமே இல்லை என்ற எண்ணம் எப்போது வருகிறதோ, அப்போது வாழ்க்கையில் துன்பமும் இல்லை, என்பதை, பட்டினத்தாருக்கு போதித்தார். பக்தி, துறவு போன்ற சிந்தனைகளை தெரிந்துகொள்ளும் போது நமது, வாழ்க்கை சரியாக இருக்கிறதா, சரியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோமா என, மனிதர்கள் தங்களது மனதை கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். அப்போது, வாழ்க்கையை சரிசெய்துகொள்ள முடியும். உயர்ந்த வாழ்க் கை வாழ முடியும்.