பதிவு செய்த நாள்
23
ஜூலை
2016
01:07
கடலுார்: மேட்டுப்பாளையம் ஜி.ஆர்.கே., எஸ்டேட்சில் உள்ள பிரபாவதி விஷ்ணு துர்கை அம்மன் கோவிலில் நவசண்டி மகா யாகம் நடந்தது. ஆலப்பாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் ஜி.ஆர்.கே., எஸ்டேட்ஸ் ராசி தோட்டத்தில் உள்ள பிரபாவதி விஷ்ணு துர்கை அம்மன் கோவிலில் நவசண்டி மகா யாகத்தையொட்டி நேற்று முன்தினம் தேவதானுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பட்டுப்புடவை ஹோமம், கடாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பூஜையில் சக்ராலயா மோட்டார்ஸ் முதன்மை அதிகாரி கார்த்தி÷ கயன், பொது மேலாளர்கள் தண்டபாணி, ரவிச்சந்திரன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கிருஷ்ணாலயா தியேட்டர் உரிமையாளர் துரைராஜ், கோமதி துரைராஜ், கோகுல் ராதாகிருஷ்ணன் மற்றும் நண்பர்கள், ஜி.ஆர்.கே., எஸ்டேட்ஸ் ஊழியர்கள் செய்திருந்தனர்.