குன்னுார் குன்னுாரில் ஆடிவெள்ளியை யொட்டி அம்மன் பத்ரகாளி அலங்கா ரத்தில் அருள்பாலித்தார். குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் 2வது ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், நடந்தன. குன்னுார் மவுன்ட்ரோடு பகுதியில் உள்ள சவு டேஸ்வரியம்மன் கோவிலில் ஆடிவெள்ளியையொட்டி அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தன. பத்ரகாளியம்மன் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, குங்கும அர்ச்சனை, மகாதீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன.