பதிவு செய்த நாள்
25
ஜூலை
2016
12:07
பெ.நா.பாளையம்: விநாயர் சதுர்த்தியையொட்டி, கோவை வடக்கில், 501 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய, இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. துடியலுார் அருகே அசோகபுரத்தில் கோவை வடக்கு இந்து முன்னணி செயற்குழு கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கிஷோர் முன்னிலை வகித்தார். இதில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், துடியலுார், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்குட்பட்ட, 501 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விசர்ஜன ஊர்வல பொதுக்கூட்டத்தை, துடியலுாரில் நடத்துவது எனவும், முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பாலன், பொருளாளர் தியாகராஜன், பொதுமக்கள் தொடர்பாளர் கார்த்தி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.