கோவில்களில் தெற்கு நோக்கி காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் அருகிலுள்ள தனிக்கோவிலில், வடக்கு பார்த்த நிலையில் இருக்கிறார். நவக்கிரக மண்டபத்தில் குரு வடக்கு நோக்கி இருப்பது வழக்கம். இங்கோ தட்சிணாமூர்த்தி வடிவில் வடக்கு நோக்கி உள்ளார். தட்சிணாமூர்த்தி அருகில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்கள் மட்டுமே இருப்பர். ஆனால் இங்கு 18 முனிவர்கள் உள்ளனர். குருதோஷ பரிகாரமாக இவரது சன்னிதியில் பக்தர்கள் அதிகளவில் நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இனிப்பு பதார்த்தங்கள் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அலைபேசி: 98407 97878.