கருங்குளம் பெருமாள் கோயிலில் வரும் 24ம் தேதி கருட சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2011 11:09
செய்துங்கநல்லூர் : கருங்குளத்தில் வரும் 24ம் தேதி கருடசேவை நடக்கிறது. புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது என்றும், அதை கருடசேவை என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த ஆண்டு வரும் 24ம் தேதி இந்த கருடசேவை நிகழ்ச்சி துவங்குகிறது. கருங்குளம் வெங்கடேச பெருமாள் கோயிலில் அதிகாலையிலேயே நிகழ்ச்சிகள் துவங்குகின்றது. காலை 6 மணிக்கு விஸ்வரூபம், பகல் 10.30 மணிக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடக்கிறது. பகல் 12 மணிக்கு தீபாராதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பகல் 1 மணிக்கு தீர்த்தவாரி, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. இரவு 10 மணிக்கு உற்சவர் கருட வாகனத்தில் மலை மேல் சுற்றி வலம் வருகிறார். இந்த கருட சேவையை முன்னிட்டு இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். வெளியூர் பக்தர்கள் கார், வேன், பைக் என பல்வேறு வாகனங்களில் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி., ஸ்டீபன் ஜேசுபாதம் ஆலோசனையில் செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் வரும் 1ம் தேதி, 8ம் தேதி மற்றும் 15ம் தேதி ஆகிய சனிக்கிழமைகளில் கருட சேவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துவருகிறது.