விருத்தாசலம் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண கொடியேற்று விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2016 12:07
விருத்தாசலம்: விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர திருக்கல்யாண விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நேற்று நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி காலை 10:45 மணிக்கு மேல் பகல் 11:50 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் கொடியேற்று விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து வரும் 4ம் தேதி திருத்தேர் விழா, 5ம் தேதி படிக பல்லக்கு விழா, 6ம் தேதி திருமாங்கல்யதாரணம் நடக்கிறது.
திட்டக்குடி: அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவிலில் காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆடிப்பூர திருவிழா துவங்கியது. தொடர்ந்து சிறப்புவழிபாடு மற்றும் மகாதீபாரதனை நடந்தது. தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜை மற்றும் சுவாமி வீதியுலா நடக்கிறது. ஆகஸ்டு 5ம் தேதி காலை தீர்த்தவாரியும், மாலை திருக்கல்யாணமும் நடக்கிறது.