சிதம்பரம் மாரியம்மன் கோவில் தெருவடைச்சான் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2016 12:07
சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவத்தையொட்டி அம்மன் தெருவடைச்சான் வீதியுலா நடந்தது. ஆடி மாத பிரம்மோற்சவம் கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை, இரவில் வீதியுலா நடக்கிறது. நேற்று முன்தினம் தெருவடைச்சான் சப்பரத் தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி, அன்று மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து, சுவாமி புறப்பாடு செய்து இரவு 9:00 மணிக்கு தெ ருவடைச்சான் சப்பரம் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி வீதியுலா நடந்தது. வரும் 31ம் தேதி திருத்தேரோட்டம். ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி செடல், தீமிதி உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வீராசாமி, அறங்காவலர் கலியமூர்த்தி செய் கின்றனர்.