பதிவு செய்த நாள்
28
ஜூலை
2016
12:07
கோவிந்தவாடி: ‘குரு பரிகார தலம்’ என, அழைக்கப்படும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவில், குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழாவிற்கு, சி றப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. விழாவின் சிறப்பு ஏற்பாடுகளை குறித்து, சார் ஆட்சியர் அருண் தம்புராஜ், பல துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, பணிகளை பட்டியலிட்டு, அவற்றை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்.
அதன் விபரம்:
ஊராட்சி நிர்வாகம்: ●கோவிந்தவாடி பல்லவன் மற்றும் சாய் ஆகிய நகர் பகுதிகளில், தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் பிற வாகனங்கள் நிறுத்துவதற்கு, அனுமதி பெற வேண்டும்
●அன்னதானம் வழங்கப்படும் நன்கொடையாளர்கள் பட்டியலை, உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தெரிவித்து, சோதனைக்கு உட்படுத்தி அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
●பிரதான இடங்களில், 15 ஒலிபெருக்கிகள் அமைத்து, காவல் கட்டுப்பாடு அறைக்கு இணைப்பு ஏற்படுத்தவேண்டும்
●கோவில் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பிற தெருக்களில், குப்பை அகற்றி, ‘பிளீச்சிங்’ பவுடர் தெளித்து, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
●கோவிலுக்கு முன் உள்ள தற்காலிக கடைகளை அகற்றி, வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தற்காலிக கடைகளை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.