ஆடி கிருத்திகை முன்னிட்டு பக்தர்கள் பால் குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2016 12:07
கரூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் வெண்ணைமலை முருகன் கோவிலுக்கு பால் குடம் எடுத்துச் சென்றனர். முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த ஆடி கிருத்திகை விழா, தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. கரூர் அடுத்த வெண்ணைமலை முருகன் கோவிலில், நேற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது. தங்கள் பிரார்த்தனைகள், நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்துகின்றனர். ஆடி கிருத்திகை முன்னிட்டு கரூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், பால்குடம் ஊர்வலமாக கொண்டு சென்று, சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.