பதிவு செய்த நாள்
01
ஆக
2016
12:08
கடலுார்: பிரதோஷத்தையொட்டி, கடலுார், விருத்தாசலம், பெண்ணாடம் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் காலை 10:00 மணிக்கு பிரதோஷ நாயகருக்கு ருத்ரபாராயணத்துடன் அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி மற்றும் நந்திகேஸ்வரருக்கு மகா அபிஷேகம், 5:00 மணிக்கு பாடலீஸ்வரர், நந்தி÷ கஸ்வரருக்கு தீபாராதனையும், 5:30 மணிக்கு பெரியநாயகிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் சிறிய நந்தி வாகனத்தில் பிரதோஷ நாயகர் ÷ காவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, தாயார், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு மாலை 4:30 மணிக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உட்பட 12 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது.
பெண்ணாடம்: பிரளயகாலேஸ்வரர் கோவில் முன் மண்டபத்தில் உள்ள அதிகார நந்திக்கு காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு கொடி மரம் அருகிலுள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது.