பதிவு செய்த நாள்
01
ஆக
2016
12:08
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று காலை மங்களாசனமும், இரவில் ஐந்து கருட சேவையும் நடக்கிறது. ஜூலை 27 ல் ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் காலை ஆண்டாள்,ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு வீதியுலாவும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஐந்தாம் திருநாளான இன்று காலை ஆடிப்பூர மண்டபத்தில் மங்களா சாசனம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு ஐந்து கருடசேவை நடக்கிறது. இதில் ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும், ரெங்கமன்னார்,பெரியபெருமாள், சுந்தரராஜப்பெருமாள்,ஸ்ரீனிவாசப்பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனங்களிலும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர், மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா செய்துள்ளனர்.