ஆடி அமாவாசை: புனித நீராட ராமேஸ்வரம், சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2016 09:08
ராமேஸ்வரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை, சுவாமி அம்பாளுக்கு காலபூஜைகள் நடந்தது. ஸ்ரீராமர், சீதாதேவி, லெட்சுமணருடன் தங்க கருட வாகனத்தில் அக்னிதீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலித்தார். அதிகாலை முதல் அக்னிதீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடி அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வழிபட்டனர். ஆடி அமாவாசையில் புண்ணிய தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை இந்துக்கள் புண்ணியமாக கருதுகின்றனர். திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் புனித நீராடுவதற்கு இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர்.