பதிவு செய்த நாள்
01
ஆக
2016
05:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரதவீதியில் பக்தர்கள் வசதிக்கு,கோயில் சார்பில் 3 புதிய பேட்டரி கார்கள் இயக்கப்பட்டது. ராமேஸ்வரம் கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தலால், 2013ம் ஆண்டு முதல் கோயில் ரதவீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். இதனால் ரதவீதியில் செல்லும் பக்தர்கள் சிரமத்தை தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் 6 பேட்டரி கார்கள் இயக்கியது. இதில் 4 கார்கள் பழுதாகி மூளையில் முடங்கியது. இந்நிலையில் பெண்கள், வயதான பக்தர்கள் ரதவீதி, சன்னதி தெருவில் நடந்து செல்ல முடியாமல், அவதிபட்டனர். இதனையடுத்து ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் சார்பில் ரூ. 21 லட்சத்தில் 3 புதிய பேட்டரிகள் வாங்கியது. புதிய பேட்டரி காருக்கு, கோயில் குருக்கள் ஆரத்தி பூஜை செய்ததும், கார்கள் இயக்கப்பட்டது. இதில் கோயில் தக்கார் குமரன்சேதுபதி, இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கோயில் அதிகாரிகள் கக்காரின், அண்ணாதுரை, கமலநாதன், பக்தர்கள் பங்கேற்றனர். பேட்டரி கார் பராமரிப்புக்கு, ஒரு பக்தருக்கு ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படும் என கோயில் அதிகாரி தெரிவித்தார்.