சாயல்குடி: சாயல்குடி அருகே கோயில் மாரியூரில் உள்ள பூவேந்திய நாதர் கோயிலில் 1008 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை விமரிசையாக நடந்தது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, விளக்கு பூஜை, குங்கும அர்ச்சனை, மாங்கல்ய நாண் பெருக்குதல் உள்ளிட்ட பூஜைகளை பெண்கள் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.