கோபி: பூதநாச்சியம்மன் நாட்ராயசுவாமி கோவிலில், நாளை பொங்கல் விழா நடக்கிறது. கோபி தாலுகா, நம்பியூர் அருகே சின்னக்கோசணத்தில், பூதநாச்சியம்மன் நாட்ராயசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆடி பொங்கல் திருவிழா கடந்த, 1ம் தேதி துவங்கியது. இன்று (3ம் தேதி) இரவு, 8 மணிக்கு படைக்கால பூஜை நடக்கிறது. நாளை (4ம் தேதி) காலை, 7 மணிக்கு பொங்கல் விழா, பொது கிடாய் விருந்து மற்றும் அன்னதானம் நடக்கிறது. பொது கிடாய் விருந்தில், ஏராளமான ஆட்டுக் கிடாய்கள் வெட்டப்படும். விழாவில் நம்பியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர்.