ஆன்ம விடுதலைக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு என வைணவம் கூறுகின்றது. புற வழிபாட்டு முறைகள் மூலம் இறைவனை நெஞ்சிலேயே நிறுத்துதல், பக்திக்கு ஏற்புடைய பணியில் தொடர்ந்து ஈடுபடுதல், சமயத் திருநூல்களைப் படித்தல், யோகம், தியானம் என்ற நடைமுறைகள் ஆகியனவே ஆன்ம விடுதலைக்கான ஒரே வழியாகும்.