Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை கோயில் திருவிழாவில் ... திருத்தணி ஆடி கிருத்திகை உண்டியல் வசூல் ரூ.1.72 கோடி திருத்தணி ஆடி கிருத்திகை உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமணம் கை கூட சிறுவாபுரிக்கு வாங்க.. செப்டம்பர் 4ல் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
திருமணம் கை கூட  சிறுவாபுரிக்கு வாங்க.. செப்டம்பர் 4ல் திருக்கல்யாணம்!

பதிவு செய்த நாள்

04 ஆக
2016
12:08

சிறுவாபுரி: சென்னையிலிருந்து  கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் 35 கி.மீ., தொலைவில் உள்ளது சிறுவாபுரி. இங்கு அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்ரீபாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு, மணக்கோலத்தில் வள்ளி மணவாள பெருமான் உற்சவ மூர்த்தியாக காட்சி தருகிறார். வள்ளியும் முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய திருக்கோலத்தினை காண்பது அரிது. இந்த வள்ளிமணவாளனை பூச நட்சத்திரத்தில் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

திருமணம் வயது வந்த ஆண்கள், பெண்கள், இந்த கோவிலுக்கு, ஆறு வாரம், முருகனுக்குரிய நாளான செவ்வாய்க்கிழமை தோறும் வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.  பிரார்த்தனை தலமாக விளங்கும் சிறுவாபுரிக்கு, ஆறு வாரம் தொடர்ந்து வரமுடியாமல் சிரமப்படும் பக்தர்களின் வசதிக்காக,  அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் ஆண்டுதோறும், சிறுவாபுரியில் வள்ளி மணவாள பெருமானுக்கு  கல்யாண மஹோற்சவத்தை நடத்துகின்றனர். இந்த மஹோற்சவத்தில் பங்கேற்கும் திருமண பிரார்த்தனையாளர்கள், வள்ளி மணவாள பெருமானுக்கு நடக்கும் அபிஷேகத்தையும், கல்யாணத்தையும் கண்ணுற்றால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த திருமண வைபவத்தில் பங்கேற்கும் ஆண்களுக்கு, விரைவில் திருமணம் நடைபெறவேண்டும் என பிரார்த்தித்து, ஆண்களுக்கு வள்ளி மாலையும்,  பெண்களுக்கு  முருகன் மாலையும் வழங்கப்படும்.  கல்யாண மஹோற்சவம் முடிந்ததும், வள்ளி மணவாளபெருமான் கோவில் பிரகாரத்தை சுற்றி ஆறு முறை வலம் வருவார். அப்போது, திருமண பிரார்த்தனையாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு , ‘வள்ளி மணவாளா போற்றி ’ என்ற மந்திரத்தை உச்சரித்தப்படி வரவேண்டும். இந்த பிரார்த்தனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு,எவ்வித கட்டணமும் கிடையாது. இதை இறை தொண்டாக, அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர்   இலவசமாக நடத்துகின்றனர்.பிரசாதம், மாலை உட்பட குளிர்பானங்கள், மதிய உணவு ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

கடந்த முறை கல்யாண மஹோற்சவத்தில் பஙகேற்று, திருமணம் கைகூடியவர்கள்,  தம்பதி சகிதமாக, செப் 3ம் தேதி வரவேண்டும். இவர்கள், வள்ளி மணவாளபெருமானுக்கு வைக்கப்படும் சீர்வரிசையை கோவிலை சுற்றி, தம்பதிகள்  எடுத்துவந்து நன்றி செலுத்த வேண்டும். இவர்களுக்கு அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பில் வரவேற்பும் விருந்தும் அளிக்கப்படுகிறது.

கல்யாண விருந்து: செப் 4ம் தேதி கல்யாண மஹோற்சவம் முடிந்ததும், மதியம்121 மணிக்கு  அன்னதானமாக கல்யாண விருந்து நடக்கிறது.  இதில், பங்கேற்க விரும்புபவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை  பொருட்களாக வழங்கி,வள்ளி மணவாளபெருமானுக்கு நன்றி செலுத்தலாம். மஹோற்சவத்தில் பங்கேற்க விரும்பும் பிரார்த்தனையாளர்கள், செப் 4ம் தேதி காலை 7மணிக்கு சிறுவாபுரிக்கு வந்தால் போதுமானது. முன் பதிவு தேவையில்லை. சென்னை கோயம்பேட்டிலிருந்து சிறுவாபுரிக்கு, தடம் எண் 533 என்ற பேருந்தும்,  சென்னை செங்குன்றத்திலிருந்து, நகரப்பேருந்துகள் அதிகம் உள்ளன.

மேலும் விபரம் அறிய :  044- 24712173, 9944309719.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: அயோத்தி கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
 ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar