பதிவு செய்த நாள்
04
ஆக
2016
12:08
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நடந்த ஆடி கிருத்திகை, மூன்று நாள் தெப்பத் திருவிழாவில், பக்தர்கள் உண்டியலில் 1.72 கோடி ரூபாய் ரொக்கம், 411 கிராம் தங்கம், 10,984 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருத்தணி முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா, கடந்த மாதம், 26ம் தேதி முதல், 30ம் தேதி வரை நடந்தது. இதில், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, மூலவரை தரிசித்தனர். மேலும், பக்தர்கள் தங்களது வேண்டுதலாக மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தினர். கோவில், தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) தனபாலன், திருவள்ளூர் உதவி ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு, இரண்டு நாட்கள் கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்களால் பிரித்து எண்ணப்பட்டது. இதில், 1,72,55,623 ரூபாய் ரொக்கம், 411 கிராம் தங்கம், 10,984 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஆடி கிருத்திகைக்கு, 1,70,69,352 ரூபாய் ரொக்கம், 494 கிராம் தங்கம், 12,891 கிராம் வெள்ளி, உண்டியல் மூலம் வருவாய் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.