சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் குருப்பெயர்ச்சி மகா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2016 12:08
சூலுார்: சூலுார் அடுத்த குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. நேற்று முன்தினம் ஆடி பண்டிகை மற்றும் குருப்பெயர்ச்சியை ஒட்டி மகா யாகம் நடந்தது. காலை,6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் ஹோமம் துவங்கியது. காலை,9:30 மணிக்கு குரு பகவான் கும்பஸ்தானம் செய்யப்பட்டு, நடந்த ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மாலை, 5:00 மணிக்கு குரு பகவான் மற்றும் நவகிரஹங்களுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது.