பதிவு செய்த நாள்
05
ஆக
2016
05:08
சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளிப் பெருந்திருவிழா கொடியேற்றம், காலை 10 மணிக்கு நடந்தது. இருக்கன்குடி மாரியம்மன் கோவில் 450 ஆண்டுகள் பழமையானது.
அர்ஜூனாநதி, வைப்பாறு ஆகிய இரு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும், ஆடி மாதம் கடைசி வெள்ளிக் கிழமையன்று பெருந்திருவிழா நடைபெறு வழக்கம். வரும் ஆகஸ்ட் 12ம் தேதி ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வருவதால் அன்று திருவிழா நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மாரியம்மன் இருக்கன்குடியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். காலை 10 மணிக்கு முத்துக்குமாரபட்டர் தலைமையில், பட்டர்கள் கோவில் கொடிமரத்திற்கு திருவிழா கொடி ஏற்றி தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் செய்தனர். பக்தர்கள் ஒம் சக்தி பராசக்தி என கோஷமிட்டு அம்மனை வழிபட்டனர். இவ்விழாவில் கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி, சாத்தூர் ஒன்றியக் குழுத்த லைவர் வேலாயுதம், நத்தத்துபட்டி, இருக்கன்குடி, கே.மேட்டுப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, அப்பனேரி கிராமங்களை சேர்ந்த முக்கியபிரமுகர்கள், நாட்டாமைகள் விழாவில் கலந்து கொண்டனர். நுõற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.